நடிகர் அஜித்துடன் சந்திப்பு.. நினைவுகளைப் பகிர்ந்த சிரஞ்சீவி
|விஷம்பரா படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற நடிகர் அஜித் குமார் சிரஞ்சீவி மற்றும் படக்குழுவை சந்தித்துள்ளார்
சென்னை,
நடிகர் அஜித் தற்போது 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும், இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை தினத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதன்படி ஐதராபாத் நகரில் படப்பிடிப்புக்கு இடையே, நடிகர் அஜித் குமார் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் சிரஞ்சீவியை சந்தித்துள்ளார். ஐதராபாத் நகரில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் விஷ்வம்பரா படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. விஷம்பரா படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற நடிகர் அஜித் குமார் சிரஞ்சீவி மற்றும் படக்குழுவை சந்தித்துள்ளார். இது தொடர்பாக நடிகர் சிரஞ்சீவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ,
நேற்று மாலை 'விஸ்வம்பரா' செட்டிற்கு சர்ப்ரைஸாக அஜித்குமார் வந்திருந்தார். இருவரும் சிறிது நேரம் அரட்டை அடித்தோம். அவரது முதல் தெலுங்கு படமான பிரேம புஸ்தகம் காலத்தை நினைவு கூர்ந்தோம். பல ஆண்டுகளாக அஜித் அடைந்திருக்கும் இந்த அபரிதமான வளர்ச்சியை பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என தெரிவித்துள்ளார்.