< Back
சினிமா செய்திகள்
Meetha Raghunath joined cinema again after marriage
சினிமா செய்திகள்

திருமணத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் இணைந்த மீதா ரகுநாத்

தினத்தந்தி
|
15 July 2024 1:49 PM IST

சாந்தி டாக்கீஸ் தயாரிக்கும் படத்தில் மீதா ரகுநாத் நடிக்க உள்ளார்.

சென்னை,

'முதல் நீ முடிவும் நீ' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவனம் ஈர்த்த நடிகை மீதா ரகுநாத். அதன் பின்னர் சென்ற ஆண்டு நடிகர் மணிகண்டனுடன் நடித்த 'குட் நைட்' திரைப்படம் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்தார்.

இந்த படத்தில் அழகான, எளிமையான நடிப்பை வெளிப்படுத்திய மீதா ரகுநாத், இப்படிப்பட்ட மனைவி வேண்டும் என இணையவாசிகள் போட்டி போட்டுக் கொண்டு பதிவிடும் வகையில், இந்தப் படத்தின் மூலம் பிரபலமானார்.

சென்ற ஆண்டு நவம்பர் மாதம் மீதா ரகுநாத்தின் நிச்சயதார்த்தம் சொந்த ஊரான ஊட்டியில் நடைபெற்றது. இதையடுத்து, மீதா ரகுநாத்தின் திருமணம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவருடன் எடுத்த திருமணப் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டார்.

இந்நிலையில், திருமணத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் இணைந்துள்ளார். அதன்படி, சித்தார்த்தின் 40-வது படத்தில் காதாநாயகியாக மீதா ரகுநாத் நடிக்க உள்ளார். இந்தப்படத்தினை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. எட்டு தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இப்படத்தினை இயக்குகிறார்.

மேலும் செய்திகள்