நடிகரின் மகன்...நடிப்பில் ஆர்வம் இல்லாமல் ஆடை தொழிற்சாலையில் வேலை
|நாடு முழுவதும் ரசிகர் பட்டாளத்துடன் இருக்கும் இவர் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கிறார்
சென்னை,
தென்னிந்திய திரையுலகில் சூர்யா ஒரு முன்னணி நடிகராக இருக்கிறார். நாடு முழுவதும் ரசிகர் பட்டாளத்துடன் இருக்கும் சூர்யா தற்போது 'கங்குவா' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகனாக இருந்தாலும், சொந்த உழைப்பால் தனது பெயரை நிலைநிறுத்திக் கொண்டவர் சூர்யா. ஆனால், அவர் ஆரம்பத்தில் படங்களில் நடிக்க விரும்பவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? அவரை பற்றி கேள்விப்படாத சில விஷயங்கள் பற்றி தற்போது காணலாம்.
லயோலா கல்லூரியில் பி.காம் பட்டப்படிப்பை முடித்த சூர்யா, நடிப்பில் ஆர்வம் இல்லாமல் சிவகுமாரின் மகன் என்ற அடையாளத்தை மறைத்துவிட்டு, திருப்பூரில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் ஆறு மாதங்கள் வேலை பார்த்தார்.
பின்னர், 1997 -ம் ஆண்டு வெளியான 'நேருக்கு நேர்' திரைப்படத்தின் மூலம் சூர்யா சினிமாவில் அறிமுகமானார், இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அப்போதிருந்து, தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார் சூர்யா.
பின்னர், கடந்த 2006-ம் ஆண்டு நடிகை ஜோதிகாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
தற்போது, சூர்யா கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அக்டோபர் மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. கங்குவா 38 மொழிகளில் வெளியாக உள்ளதாகவும், இதில் சூர்யா 7 வேடங்களில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, சூர்யா தனது 44-வது படத்தில் நடித்து வருகிறார்.