கவர்ச்சி புகைப்படத்தால் சர்ச்சையில் மீரா ஜாஸ்மின்
|மீரா ஜாஸ்மின் பட வாய்ப்புகளை பிடிக்க தன்னை கவர்ச்சியாக புகைப்படம் எடுத்தும், வீடியோ எடுத்தும் வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழில் விஜய்யுடன் புதிய கீதை, மாதவன் ஜோடியாக ரன், விஷாலுடன் சண்டக்கோழி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மீரா ஜாஸ்மின் மலையாள திரை உலகிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார்.
2014-ல் திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். மீரா ஜாஸ்மினுக்கு இப்போது 40 வயதாகும் நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார். மலையாள படமொன்றில் நடிக்க அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
மேலும் பட வாய்ப்புகளை பிடிக்க தன்னை கவர்ச்சியாக புகைப்படம் எடுத்தும், வீடியோ எடுத்தும் வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். வெறும் உள்ளாடைகளுடன் தன்னை படம் பிடித்து மீரா ஜாஸ்மின் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகிறது.
அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மீரா ஜாஸ்மின் அழகாக இருப்பதாக பாராட்டி உள்ளனர். இன்னொரு புறம் இந்த புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அடுத்து நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிடுவீர்களா? என்று கேலி செய்தும், விமர்சித்தும் பலர் கண்டன பதிவுகள் வெளியிட்டு உள்ளனர்.