பாரம்பரிய சேலையில் மீனாட்சி சவுத்ரி - புகைப்படங்கள் வைரல்
|பாரம்பரிய சேலை அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் மீனாட்சி சவுத்ரி வெளியிட்டுள்ளார்.
சென்னை,
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மீனாட்சி சவுத்ரி. இவர் 2021-ம் ஆண்டு வெளிவந்த இச்சட்டா வாகனுமுலுநில்லுபருடா என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். சமீபத்தில் மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த குண்டூர்காரம் படத்தில் இவர் நடித்திருந்தார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார்.
சினிமா மட்டுமின்றி சமூக வலைதளங்களில் ஆர்வம் காட்டி வருகிறார். இதனால், அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோகளை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் பாரம்பரிய சேலை அணிந்தபடி இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சிலையாக காட்சியளிக்கும் மீனாட்சி சவுத்ரியின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் செயற்கை தொழில்நுட்பத்தை மிஞ்சிய அழகில் இருப்பதாக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.