மீண்டும் படப்பிடிப்பில் மீனா
|கணவரை இழந்த துக்கத்தில் இருந்து மீண்டுள்ள மீனா தற்போது ஒரு படப்பிடிப்பில் பங்கேற்று உள்ளார். படப்பிடிப்பில் மேக்கப் போட்டுக்கொள்ளும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் மீனா. மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், அர்ஜுன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் படங்களில் நடித்துள்ளார். திருமணத்துக்கு பிறகு குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார். இவருக்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளது. நைனிகாவும் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். இந்த நிலையில் மீனாவின் கணவர் வித்யாசாகர், கொரோனா தொற்றால் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். கணவர் மறைவுக்கு பிறகு மீனா பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே முடங்கி இருந்தார். சமீபத்தில் தோழிகளுடன் வெளியூர் சென்று வந்தார். இதன் மூலம் கணவரை இழந்த துக்கத்தில் இருந்து மீண்டுள்ள மீனா தற்போது ஒரு படப்பிடிப்பில் பங்கேற்று உள்ளார். படப்பிடிப்பில் மேக்கப் போட்டுக்கொள்ளும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.