சரத்பாபுவின் உடல்நிலை குறித்து மருத்துவ அறிக்கை
|தமிழ், திரையுலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி நடிகராக வலம் வந்த சரத்பாபு பின்னர் குணசித்திர வேடங்களில் நடித்தார். சில வாரங்களுக்கு முன்பு சரத்பாபுவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பெங்களூரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், உள் உறுப்புகள் செயல் இழந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இரு தினங்களுக்கு முன்பு சரத்பாபு உடல்நிலை குறித்து வதந்தி பரவியது. இதனை குடும்பத்தினர் மறுத்தனர். தவறான வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரி நிர்வாகம் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில், "சரத்பாபுவுக்கு செயற்கை சுவாச கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. அதே நேரம் உடல்நிலை சீராகவும் இருக்கிறது. வதந்திகளை பரப்ப வேண்டாம்'' என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரஜினிகாந்துடன் முள்ளும் மலரும், நெற்றிக்கண், அண்ணாமலை, முத்து, கமல்ஹாசனுடன் சலங்கை ஒலி உள்ளிட்ட பல வெற்றி படங்களில் சரத்பாபு நடித்து இருக்கிறார்.