மயில்சாமியின் குறும்படம்
|தமிழ் திரையுலகில் 35 வருடங்களாக நகைச்சுவை நடிகராக வலம் வந்த மயில்சாமி கடந்த மாதம் மரணம் அடைந்தார். அவர் இறப்பதற்கு முன்பு `விளம்பரம்' என்ற குறும்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இன்னொரு முக்கிய வேடத்தில் ரேகா நாயர் மற்றும் இப்ராஹிம், ராம் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ராகுல் டைரக்டு செய்துள்ளார். அசோக் குமார் தயாரித்துள்ளார். இசை: கார்த்திக் ராஜா, ஒளிப்பதிவு: அசோகர்.
இந்த குறும்படம் குறித்து ரேகா நாயர் கூறும்போது, ``விளம்பரங்கள் பொதுமக்களிடம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்து கின்றன. அதனால் விளம்பரத்தில் யார் நடித்தாலும் அதன் உண்மைத்தன்மை அறியாமல் நடிக்க வேண்டியது இல்லை'' என்றார். டைரக்டர் பேரரசு பேசும்போது, ``விளம்பரத்தில் நடிக்கும்போது நடிகர்-நடிகைகளுக்கு பொறுப்பு வேண்டும். நீங்கள் நடிக்கும் விளம்பரம் குறித்த உண்மைத்தன்மையை ஆராய வேண்டும். சரியில்லாத ஒன்றை, நம்மை நம்பும் மக்களிடம் `சரி' என்று கொடுப்பது நம்பிக்கை துரோகம்'' என்றார்.