சமந்தா நடித்துள்ள 'சாகுந்தலம்' படத்தில் இருந்து 'மயக்கும் பொழுதே' பாடல் வெளியீடு
|‘சாகுந்தலம்’ படத்தில் இருந்து 'மயக்கும் பொழுதே' என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
சென்னை,
சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள 'சாகுந்தலம்' படத்தில் நடிகை சமந்தா நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் 'சாகுந்தலம்' திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது. இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் இந்த படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில், 'சாகுந்தலம்' படத்தில் இருந்து 'மயக்கும் பொழுதே' என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. கபிலன் வரிகளில் சத்ய பிரகாஷ் மற்றும் ஸ்வேதா மோகன் பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
Feel the yearning for love #MadhuraGathamaa #MadhuraKalTu #MadhuraGathaBaa #MayakkumPozhudhe from #Shaakuntalam out now!https://t.co/uSwzyu7B4N@Gunasekhar1 @ActorDevMohan @neelima_guna #ManiSharma @GunaaTeamworks @SVC_official @tipsofficial @tipsmusicsouth pic.twitter.com/DuJQQ7GABy
— Samantha (@Samanthaprabhu2) February 14, 2023 ">Also Read: