< Back
சினிமா செய்திகள்
பிரபல வெப் தொடரில் நடித்த மேத்யூ பெர்ரி காலமானார்: ரசிகர்கள் அதிர்ச்சி
சினிமா செய்திகள்

பிரபல வெப் தொடரில் நடித்த மேத்யூ பெர்ரி காலமானார்: ரசிகர்கள் அதிர்ச்சி

தினத்தந்தி
|
29 Oct 2023 12:31 PM IST

பிரண்ட்ஸ் வெப் தொடரில் சாண்ட்லர் கதாபாத்திரத்தில் நடித்த புகழ்பெற்ற நடிகர் மேத்யூ பெர்ரி (வயது 54) காலமானார்.

நியூயார்க்,

உலகளவில் மிகவும் பிரபலமான வெப் தொடர்களில் ஒன்று பிரண்ட்ஸ். 1994ஆம் ஆண்டுதான் இந்த வெப் தொடர் முதன் முதலில் ஒளிபரப்பாக துவங்கியது.

முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து 2004 வரை 10 சீசன்களாக பிரண்ட்ஸ் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஒளிபரப்பானது. இந்த வெப் தொடரில் ஜெனிபர் அனிஸ்டன், கோர்டனி காக்ஸ், லிசா குட்ரா, மாட் லெபிளாங்க் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இதில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சாண்ட்லர் பிங் என்ற கதாபாத்திரத்தில் நடித்த மேத்யூ பெர்ரி தனது 54 வயதில் மரணமடைந்துள்ளார். இவருடைய மரணம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் கொடுத்துள்ளது. மேலும் திரையுலக நட்சத்திரங்கள், ரசிகர்களும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்