5 மில்லியன் பார்வைகளை கடந்த 'தி கோட்' படத்தின் மட்ட பாடல்
|'தி கோட்' படத்தின் மட்ட பாடல் சுமார் 5 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
சென்னை,
இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம், 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (தி கோட்). இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, யோகிபாபு, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்பட பலர் நடித்துள்ளனர். 'தி கோட்' படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது படத்திற்கான புரோமோசன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
படத்தின் 3 பாடல்கள் இதற்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இந்தநிலையில் நேற்று இப்படத்தின் 4-வது பாடலான 'மட்ட' பாடலை யுவன் ஷங்கர் ராஜா பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் வெளியிட்டனர்.
இப்பாடல் வெளியான 24 மணி நேரத்திற்குள் சுமார் 5 மில்லியன் பார்வைகளை கடந்து தற்போது யூ-டியூப் தளத்தில் டிரெண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது. இது குறித்த பதிவினை படக்குழு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.