பூஜையுடன் தொடங்கிய 'மாஸ்க்' திரைப்படம் - புகைப்படங்கள் வைரல்
|கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது.
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் கவின். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஸ்டார். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் நல்ல வசூலைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இப்போது கவின் தன்னுடைய அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார். இந்த படத்துக்கு 'மாஸ்க்' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். அறிமுக இயக்குனர் விகர்ணன் அசோக் இயக்கும் இந்த படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும், சார்லி, ருஹானி ஷர்மா, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோக் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனமும், பிளாக் மெட்ராஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. இந்நிலையில், 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.