தமன்னாவுக்கு திருமணம்
|இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் தமன்னா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மா இடையே காதல் என பேசப்பட்டது. கிசுகிசுக்கப்பட்ட காதல் விவகாரத்தை தமன்னாவே உறுதி செய்து அறிவித்தார். சமீபத்தில் வந்த 'லஸ்ட் ஸ்டோரிஸ்-2' படத்தில் தமன்னா-விஜய் வர்மா நடித்த நெருக்கமான காட்சிகள் இணையதளமே சூடாகும் அளவு கிளுகிளுப்பாக அமைந்திருந்தது.
இருதரப்பிலும் தங்களது காதலை ஒப்புக்கொண்ட நிலையில் 'எப்போது திருமணம் செய்துகொள்ள போகிறீர்கள்?' என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஆனாலும் இருவரும் சிரிப்பையே பதிலாக்கி வருகிறார்கள்.
தற்போது அந்த கேள்வியை தமன்னாவின் வருங்கால மாமியாரே கேட்க தொடங்கிவிட்டாராம். மாமியாரின் ஆசையை நிறைவேற்றுவது தன் கடமை என்று நண்பர்களிடம் தமன்னா பெருமையாக பேசிவருகிறாராம்.
இதனால் விரைவில் தமன்னா-விஜய் வர்மா தரப்பில் இருந்து நல்ல செய்தி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினிகாந்த் ஜோடியாக தமன்னா நடித்துள்ள 'ஜெயிலர்' படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.