வெளிநாட்டவருடன் திருமணமா? பிரபல நடிகை விளக்கம்
|பிரபல நடிகை நிகிஷா படேல் வெளிநாட்டவரை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வைரலானது. இதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் ஜோடியாக புலி படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமான நிகிஷா படேல், தமிழில் தலைவன், என்னமோ ஏதோ, கரையோரம், நாரதன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபுதேவாவை திருமணம் செய்ய இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் பரவி, பின்னர் அதில் உண்மை இல்லை என்று மறுத்தார். இந்த நிலையில் நிகிஷா படேல் வெளிநாட்டை சேர்ந்த ஒருவருடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அதை பார்த்தவர்கள் படத்தில் இருக்கும் வெளிநாட்டவரை நிகிஷா படேல் காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பரபரப்பாக பேசினர். சமூக வலைத்தளத்திலும் திருமண தகவல் வைரலானது. இதற்கு நிகிஷா படேல் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, ''இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படத்தில் என்னுடன் இருப்பவரை நான் திருமணம் செய்யவில்லை. திருமணம் குறித்து வெளியான தகவல்களில் உண்மை இல்லை" என்று மறுத்துள்ளார்.