< Back
சினிமா செய்திகள்
இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை திருமணம் - வதந்திகளுக்கு விஜய் தேவரகொண்டா முற்றுப்புள்ளி
சினிமா செய்திகள்

'இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை திருமணம்' - வதந்திகளுக்கு விஜய் தேவரகொண்டா முற்றுப்புள்ளி

தினத்தந்தி
|
21 Jan 2024 7:27 PM IST

இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த 'கீதா கோவிந்தம்' திரைப்படம் பல இளம் ரசிகர்களை கவர்ந்தது.

சென்னை,

தெலுங்கு திரையுலகில் இளம் நடிகர்களாக வலம் வருபவர்கள் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா. இருவரும் தமிழ், தெலுங்கு என பல படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த 'கீதா கோவிந்தம்' திரைப்படம் பல இளம் ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தில் ராஷ்மிகா விஜய் தேவரகொண்டாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் இருவரும் காதலித்து வருவதாக தொடர்ந்து கிசுகிசுக்கப்படுகிறது. ஒருவர் வீட்டில் ஒருவர் அடிக்கடி விருந்து சாப்பிடுவதாகவும் பேசப்படுகிறது. சமீபத்தில் வெளிநாட்டு கடற்கரையில் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகாவும் சுற்றித்திரிந்தது கிசுகிசுக்களுக்கு தீனி போடும் விதமாக அமைந்தது.

இதற்கிடையில் இருவரும் பிப்ரவரி மாதம் திருமணம் செய்துகொள்ள முடிவு எடுத்துள்ளதாகவும், விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விஜய் தேவரகொண்டா தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், ''பிப்ரவரி மாதம் எனக்கு திருமணமோ, நிச்சயதார்த்தமோ நடைபெற போவதில்லை. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை எனக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறீர்கள். ஒவ்வொரு ஆண்டும் இதுபோல வதந்திகளை கேட்டு வருகிறேன். விட்டால் என் கையை பிடித்து எனக்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள் போலிருக்கிறது'', என்று கூறியுள்ளார்.

இதன்மூலம் திருமணம் குறித்து பரவிய வதந்திகளுக்கு முற்றிப்புள்ளி வைத்துள்ளார். ஆனால் ராஷ்மிகா தரப்பில் இதுகுறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை

மேலும் செய்திகள்