விஷால் நடிக்கும் 'மார்க் ஆண்டனி' படத்தின் பாடல் வெளியானது ..!
|இந்த பாடலை இயக்குனர் டி.ராஜேந்தர் பாடியுள்ளார்.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு இப்படம் வருகிற விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.
இந்நிலையில், 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகியுள்ளது . 'அதிருதா... நெஞ்சம் அதிரணும் மாமே...' பாடலின் லிரிக்கள் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.இந்த பாடலை இயக்குனர் டி.ராஜேந்தர் பாடியுள்ளார்.
Here we go, proudly presenting the Ist single from #MarkAntony with the ever green #TR Sir' lightning voice, GB #Adhirudha#WorldOfMarkAntonyhttps://t.co/2CHCfOI4qT
— Vishal (@VishalKOfficial) July 15, 2023