< Back
சினிமா செய்திகள்
நடிகர் கார்த்தியுடன் கூட்டணி அமைக்கும் மாரி செல்வராஜ்
சினிமா செய்திகள்

நடிகர் கார்த்தியுடன் கூட்டணி அமைக்கும் மாரி செல்வராஜ்

தினத்தந்தி
|
8 Aug 2024 6:19 PM IST

நடிகர் கார்த்தி- மாரி செல்வராஜ் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படமானது வித்தியாசமான கதையில் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை,

இயக்குனர் மாரி செல்வராஜ், பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் முக்கியமான இயக்குனராக உருவெடுத்துள்ளார்.அடுத்ததாக இவரது இயக்கத்தில் உருவாகி இருக்கும் வாழை எனும் திரைப்படம் வருகின்ற ஆகஸ்டு 23 அன்று வெளியாக இருக்கிறது. மேலும் இவர் துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் எனும் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார்.

அடுத்ததாக தனுஷ், கார்த்தி, ரஜினி ஆகியோரின் நடிப்பில் தனது அடுத்தடுத்த படங்களை இயக்க இருக்கிறார் மாரி செல்வராஜ். அதன்படி கார்த்தி நடிப்பில் இவர் இயக்க உள்ள புதிய படத்தை பிரன்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாக ஏற்கனவே செய்திகள் கசிந்திருந்தன. இந்நிலையில் இது குறித்து மாரி செல்வராஜ் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அதாவது சமீபத்தில் நடந்த பேட்டியில் மாரி செல்வராஜ், "தனுஷ் படத்தை முடித்த பிறகு கார்த்தி படத்தை தொடங்க இருக்கிறேன். கார்த்தி என்னுடன் ஒரு படம் பண்ண விரும்பினார். மாமன்னன் படப்பிடிப்பு சமயத்தில் கார்த்தி என்னை அழைத்து ஒரு புராஜெக்ட் பற்றி பேசினார். நான் அவருக்கு ஐந்து நிமிட கதையை சொன்னேன். உடனே கார்த்தி அந்த கதைக்கு ஓகே சொல்லிவிட்டார்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இவர்களின் கூட்டணியில் உருவாக இருக்கும் புதிய படமானது வித்தியாசமான கதையில் உருவாக இருப்பதாகவும் இதன் படப்பிடிப்பு 2025-ல் தொடங்கப்படும் எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்