'பைசன்' மற்றும் தனுஷ் படம் குறித்து அப்டேட் கொடுத்த மாரி செல்வராஜ்
|தனுஷ், கார்த்தி, ரஜினி ஆகியோரின் நடிப்பில் தனது அடுத்தடுத்த படங்களை மாரி செல்வராஜ் இயக்க இருக்கிறார்.
சென்னை,
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வாழை' படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கிறது. இந்த வெற்றியை படக்குழு கொண்டாடி வருகிறது. மேலும், பைசன் படத்தையும் மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். அதனைத்தொடர்ந்து, தனுஷ், கார்த்தி, ரஜினி ஆகியோரின் நடிப்பில் தனது அடுத்தடுத்த படங்களை இயக்க இருக்கிறார் மாரி செல்வராஜ்.
இந்தநிலையில், மாரி செல்வராஜ் 'பைசன்' மற்றும் தனுஷ் படம் குறித்து அப்டேட் கொடுத்திருக்கிறார்.
விளையாட்டு கதைக்களத்தில் உருவாகும் 'பைசன்' படத்தில் நடிகர் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும் இவருடன், அனுபமா, லால், பசுபதி, ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில், நேற்று 'வாழை' படக்குழு செய்தியாளர்களை சந்தித்தது. அப்போது பேசிய மாரி செல்வராஜ்,
''பைசன்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 60 சதவீதம் முடிவடைந்துவிட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் தனுஷ் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும், என்றார். இது மாரிசெல்வராஜ், தனுஷ் கூட்டணியில் உருவாகும் 2-வது படமாகும். இதற்கு முன்பு தனுஷ் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளிவந்த கர்ணன் படத்தை மாரிசெல்வராஜ் இயக்கியிருந்தார்.