< Back
சினிமா செய்திகள்
5வது படத்திற்கான அறிவிப்பை வெளியிட்ட இயக்குநர் மாரி செல்வராஜ்
சினிமா செய்திகள்

5வது படத்திற்கான அறிவிப்பை வெளியிட்ட இயக்குநர் மாரி செல்வராஜ்

தினத்தந்தி
|
12 March 2024 3:14 PM IST

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

பரியேறும் பெருமாள் படத்தின் மூலமாக தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ். சாதிய ஒடுக்குமுறைகள் மற்றும் கல்வியின் முக்கியத்துவம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பேசிய பரியேறும் பெருமாள் திரைப்படம், மக்களிடையே மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.

இயக்குநர் மாரி செல்வராஜ் அடுத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். பா.இரஞ்சித் மற்றும் அப்லாஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கவுள்ளார். இந்த படத்தின் நாயகியாக பிரேமம் படத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

துருவ் விக்ரம் இந்த படத்தில் கபடி வீரராக நடிக்கவுள்ளார். மணத்தி கணேசனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்திற்காக நடிகர் துருவ் விக்ரம், நீண்ட நாட்களாக கபடி பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அதேபோல் மாநில அளவிலான கபடி போட்டிகளை நேரில் சென்று பார்வையிட்டார். தற்போது படப்பிடிப்பு தொடங்கவுள்ளதால், ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்