< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
மார்ச் மாதத் துளிகள் - புகைப்படம் பகிர்ந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
|2 April 2024 10:45 AM IST
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார்.
சென்னை,
பிரபல நடிகரான ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அண்மையில், இவரது இயக்கத்தில் லால் சலாம் திரைப்படம் வெளியானது. விஷ்ணு விஷால், விக்ராந்த் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்த இந்தப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்தப்படம் மக்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்த நிலையில் அவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் ஓம் நமச்சிவாய மந்திரம் எழுதிய காகிதம், காசி சென்றபோது எடுத்த புகைப்படம், வொர்க் அவுட் செய்த புகைப்படம் உள்ளிட்டவற்றை பகிர்ந்து மார்ச் மாதத் துளிகள் என்று பதிவிட்டு இருக்கிறார்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.