< Back
சினிமா செய்திகள்
நடிகர் ஷாருக்கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கும் மராட்டிய காவல்துறை
சினிமா செய்திகள்

நடிகர் ஷாருக்கானுக்கு 'ஒய் பிளஸ்' பிரிவு பாதுகாப்பு வழங்கும் மராட்டிய காவல்துறை

தினத்தந்தி
|
9 Oct 2023 9:58 AM IST

நடிகர் ஷாருக்கானுக்கு “ஒய் பிளஸ்” பிரிவு பாதுகாப்பு அளிக்க உள்ளதாக மராட்டிய காவல் துறை தெரிவித்துள்ளது.

மும்பை,

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்துள்ள பதான், ஜவான் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், மிகப்பெரும் வசூல் சாதனையும் படைத்தது.

இந்த நிலையில், பதான், ஜவான் படங்கள் வெளியான பிறகு, தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக மராட்டிய காவல் துறையிடம் நடிகர் ஷாருக்கான் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் ஷாருக்கானுக்கு "ஒய் பிளஸ்" பிரிவு பாதுகாப்பு அளிக்க உள்ளதாக மராட்டிய காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்