'அதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது ' - பாலிவுட் நடிகை
|பாக்ஸ் ஆபிஸ் வசூல் நமது கைகளில் இல்லை என்று மானுஷி சில்லர் கூறினார்.
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகை மானுஷி சில்லர். இவர் தற்போது நடித்துள்ள திரைப்படம் படே மியான் சோட் மியான். இப்படத்தில் அக்சய் குமார் மற்றும் டைகர் ஷெராப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆக்சன்-திரில்லர் பாணியில் உருவான இப்படத்தை அலி அப்பாஸ் ஜாபர் எழுதி இயக்கினார்.
இப்படம் கடந்த 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தது. இதனால், வசூலிலும் பாதிப்பு ஏற்பட்டது. இப்படம் வெளியாகி ரூ.55 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. படம் தோல்வி அடைந்ததையடுத்து இப்படத்தில் நடித்த மானுஷி சில்லர் இது குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது,
நான் என்னை சமாதானப்படுத்திக் கொண்டேன். என் வாழ்க்கையில் இதைப்போல் நிறைய நடந்துள்ளது என்று எனக்குள் நினைத்துக்கொண்டேன். அதற்காக நான் கடினமாக உழைக்கவில்லை என்றில்லை. ஒரு நடிகராக, உங்கள் படங்கள் நன்றாக வர வேண்டும் என்று விரும்புவீர்கள். மக்கள் உங்களையும் உங்கள் படத்தையும் விரும்ப வேண்டும் என்று நீங்கள் கருதுவீர்கள்.
அது சாதாரணமாக நடக்காது. பாக்ஸ் ஆபிஸ் வசூல் நமது கைகளில் இல்லை. அதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. அதனால் நான் அதைப் பற்றி அதிகம் யோசிப்பதில்லை. இவ்வாறு கூறினார்.