மதுபாட்டிலில் கழுத்துப்பட்டை... மன்சூர் அலிகானின் 'சரக்கு' பட வழக்கில் கோர்ட்டு உத்தரவு...!
|சரக்கு படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் சென்னை நகர் உரிமையியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
சென்னை,
இயக்குனர் ஜெயக்குமார் இயக்கத்தில் நடிகர் மன்சூர் அலிகான் வழக்கறிஞராக நடித்திருந்த திரைபடம் 'சரக்கு'. இந்த படத்தில் வலினா பிரின்ஸ், நாஞ்சில் சம்பத், மொட்டை ராஜேந்திரன், கோதண்டம், கிங்ஸ்லி, சேசு, தீனா, ரவி மரியா, லொள்ளுசபா மனோகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த மாதம் 29ம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் போஸ்டரில் மதுபாட்டிலின் கழுத்து பகுதியில் வழக்கறிஞர்கள் அணியும் கழுத்துப்பட்டை இடம்பெற்று இருந்தது. இதற்கு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த படத்திற்கு எதிராக சென்னை நகர் உரிமையியல் சிவில் கோர்ட்டில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. .
இந்த வழக்கு நேற்று நீதிபதி சுந்தரராஜன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி படத்தின் போஸ்டரில் இடம்பெற்றுள்ள கழுத்துப்பட்டையை நீக்க படக்குழுவிற்கு உத்தரவிட்டார்.