மதுவுக்கு எதிராக மன்சூர் அலிகானின் விழிப்புணர்வு படம்
|சரக்கு என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது. இதில் மன்சூர் அலிகான் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வலினா பிரின்ஸ் நடிக்கிறார். நாஞ்சில் சம்பத் சிறப்பு தோற்றத்தில் வருகிறார். மொட்டை ராஜேந்திரன், கோதண்டம், கிங்ஸ்லி, சேசு, தீனா, ரவி மரியா, லொள்ளுசபா மனோகர், மூஸா, மதுமிதா, வினோதினி, லியாகத் அலிகான், பயில்வான் ரங்கநாதன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஜெயக்குமார் ஜே. டைரக்டு செய்கிறார். மன்சூர் அலிகான் தயாரிக்கிறார். படம் பற்றி அவர் கூறும்போது, ``தமிழ் நாட்டை பாடாய் படுத்தும் மதுவை வைத்து ஒரு புரட்சி படைப்பாக இந்த படம் உருவாகிறது'' என்றார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. படத்தின் முதல் தோற்றத்தை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டார். இசை: சித்தார்த் விபின், ஒளிப்பதிவு: அருள் வின்செண்ட், திரைக்கதை, வசனம்: எழிச்சூர் அரவிந்தன்.