ரூ. 100 கோடி வசூலை கடந்த 'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படம்
|மலையாள திரையுலகில் ரூ. 100 கோடி வசூல் செய்த நான்காவது படம் என்ற பெருமையை 'மஞ்சுமெல் பாய்ஸ்' பெற்றுள்ளது.
சென்னை,
இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மஞ்சுமெல் பாய்ஸ்'. இப்படத்தில் நடிகர்கள் சவுபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி கடந்த 23 ம் தேதி வெளியான இப்படம் கேரளத்தைவிட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று அதிக வசூலைக் குவித்து வருகிறது.ஒவ்வொரு நாளும் நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கு இணையாக டிக்கெட் விற்பனை நிகழ்ந்து வருவதால் இந்தாண்டின் வசூல் சாதனை படங்களில் ஒன்றாக மஞ்சுமெல் பாய்ஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் , 'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படம் 12 நாட்களில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு தற்போது அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் மலையாள திரையுலகில் ரூ. 100 கோடி வசூல் செய்த நான்காவது படம் என்ற பெருமையை 'மஞ்சுமெல் பாய்ஸ்' பெற்றுள்ளது.