< Back
சினிமா செய்திகள்
மஞ்சுமெல் பாய்ஸ்  திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு
சினிமா செய்திகள்

'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிப்பு

தினத்தந்தி
|
27 April 2024 2:45 PM IST

'மஞ்சுமெல் பாய்ஸ்' டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் 'மஞ்சுமெல் பாய்ஸ்'. இப்படத்தில் நடிகர்கள் சவுபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தனர். கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி வெளியான இப்படம் கேரளாவை விட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று அதிக வசூலைக் குவித்தது.இதுவரை, தமிழகத்தில் வெளியான மலையாளப் படங்களில் அதிக வசூலைக் குவித்த படம் என்கிற சாதனையை படைத்திருக்கிறது 'மஞ்சுமெல் பாய்ஸ்'.

'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படம் உலகளவில் ரூ.235 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.இதையடுத்து இப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், மஞ்சுமெல் பாய்ஸ் படம் ஓடிடியில் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் அடுத்த மாதம் 5-ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்