பிஎம்டபிள்யூ பைக்கில் சாலையை கிழித்துக்கொண்டு வேகமாக செல்லும் மஞ்சு வாரியர் - வீடியோ வைரல்
|கேரள மாநிலம் கொச்சியில் நடிகை மஞ்சு வாரியர் தனது பிஎம்டபிள்யூ பைக்கில் வலம் வரும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கொச்சி,
நடிகை மஞ்சு வாரியரை பற்றி அறியாதவர்கள் இருக்க மாட்டார்கள். மலையாள நடிகையாக இருப்பினும், தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமான நடிகையாக மஞ்சு வாரியர் உள்ளார். குறிப்பாக, நடிகர் தனுஷ் உடன் இணைந்து அசூரன் படத்தில் நடித்த பின்பு தமிழ்நாட்டில் பிரபலமாகினார்.
இருப்பினும், துணிவு படத்தில் நடிகர் அஜித் உடன் இணைந்து நடித்த பின்பே நடிகை மஞ்சு வாரியருக்கு பைக் டிராவல்கள் மீது ஈர்ப்பு அதிகமாகியது என சொல்ல வேண்டும். ஏனெனில், துணிவு படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதுதான், நடிகர் அஜித்தை போல் விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ பைக்கை மஞ்சு வாரியர் வாங்கினார். அதன்பின் அந்த பைக்கில் அஜித்துடன் இணைந்து இந்தியாவில் நிறைய இடங்களுக்கு மஞ்சு வாரியர் பைக் ட்ரிப் சென்று உள்ளார்.
இந்த நிலையில், நடிகை மஞ்சு வாரியர் தனது விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ பைக்கில் சாலையை கிழித்துக் கொண்டு வேகமாக செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பிரம்மாண்டமாக இருக்கும் பிஎம்டபிள்யூ ஜி.எஸ் பைக்கில், ஹெல்மெட் அணிந்துக் கொண்டு நடிகை மஞ்சு வாரியர் செல்லும் காட்சிகளை இந்த வீடியோவில் காணலாம்.
மஞ்சு வாரியரின் பிஎம்டபிள்யூ பைக்கிற்கு அருகே சென்ற மற்றொரு பைக்கில் இருந்து இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்ட அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டு இருப்பவர் வேறு யாருமில்லை, மஞ்சு வாரியர்தான். நடிகை மஞ்சு வாரியரின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'உங்கள் அச்சத்தை நீங்கள் இன்னும் கேட்க முடிந்தால், ஒரு கியரை மாற்றவும்' என்கிற கேப்ஷன் உடன் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் அஜித்குமாருடன் துணிவு படத்தில் நடித்த போது, அவருடன் லடாக்கிற்கு பயணம் செய்த மஞ்சுவாரியர், பின்னர் பைக் ஓட்ட கற்றுக்கொண்டு, ஓட்டுநர் உரிமம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.