< Back
சினிமா செய்திகள்
பைக் ஓட்ட உரிமம் பெற்ற மஞ்சு வாரியர்
சினிமா செய்திகள்

'பைக்' ஓட்ட உரிமம் பெற்ற மஞ்சு வாரியர்

தினத்தந்தி
|
18 Jan 2023 8:25 AM IST

நடிகை மஞ்சு வாரியர் எர்ணாகுளம் காக்கநாடு ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு நேரில் சென்று அதிகாரி முன்னிலையில் பைக் ஓட்டி காண்பித்து ஓட்டுனர் உரிமத்தை அவர் பெற்று இருக்கிறார்.

அஜித்குமாருடன் மஞ்சுவாரியர் நடித்துள்ள 'துணிவு' படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. ஏற்கனவே படப்பிடிப்பு ஓய்வு நேரங்களில் 'பைக்' பயணம் மேற்கொள்ளும் அஜித்குமார் 'துணிவு' படப்பிடிப்பு சமயத்திலும் வட இந்தியாவில் பல பகுதிகளில் பைக்கில் சுற்றி வந்தார்.

இந்த 'பைக்' பயணத்தில் மஞ்சுவாரியரும் இணைந்தார். அஜித்குமாருடன் லடாக் பகுதியில் பைக் பயணம் செய்த புகைப்படங்களை மஞ்சுவாரியர் வலைத்தளத்தில் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் மஞ்சுவாரியர் தற்போது பைக் ஓட்டுவதற்கான ஓட்டுனர் உரிமத்தை பெற்று இருக்கிறார். எர்ணாகுளம் காக்கநாடு ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு நேரில் சென்று அதிகாரி முன்னிலையில் பைக் ஓட்டி காண்பித்து ஓட்டுனர் உரிமத்தை அவர் பெற்று இருக்கிறார். அவர் ஓட்டுனர் உரிமம் வாங்கிய புகைப்படம் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகிறது. இனிமேல் மஞ்சு வாரியரால் தனியாக பைக் ஓட்டி செல்ல முடியும்.

மேலும் செய்திகள்