ரூ.22 லட்சத்துக்கு சொகுசு பைக் வாங்கிய மஞ்சுவாரியர்
|சுமார் ரூ.22 லட்சம் மதிப்புள்ள சொகுசு பைக்கை சொந்தமாக மஞ்சுவாரியர் வாங்கி இருக்கிறார்.
அஜித்குமாரை பார்த்து நடிகை மஞ்சுவாரியருக்கும் பைக் ஆர்வம் தொற்றிக்கொண்டு உள்ளது. துணிவு படத்தில் இருவரும் இணைந்து நடித்து இருந்தனர். இதன் படப்பிடிப்பு வட மாநிலங்களில் நடந்தபோது ஓய்வு நேரத்தில் அஜித்குமார் பைக்கில் பல்வேறு இடங்களுக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்து இருந்தார். ஒரு கட்டத்தில் மஞ்சுவாரியரும் அவருடன் பைக் பயணத்தில் இணைந்தார்.
அஜித்குமாருடன் லடாக் பகுதியில் மஞ்சுவாரியர் பைக்கில் சென்ற புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியானது. படப்பிடிப்பை முடித்து விட்டு கேரளா திரும்பியதும் எர்ணாகுளம் காக்கநாடு ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு சென்று அதிகாரி முன்னிலையில் பைக் ஓட்டி காண்பித்து ஓட்டுனர் உரிமத்தை மஞ்சு வாரியர் வாங்கினார்.
இந்த நிலையில் தற்போது சுமார் ரூ.22 லட்சம் மதிப்புள்ள சொகுசு பைக்கை சொந்தமாக மஞ்சுவாரியர் வாங்கி இருக்கிறார். அந்த பைக்கை ஓட்டிச்செல்லும் வீடியோவை வலைத்தளத்தில் வெளியிட்டு, "துணிச்சலுக்கான ஒரு சிறிய படி எப்போதும் சிறந்தது. நல்ல ரைடர் ஆவதற்கு முன்பு நிறைய கற்க வேண்டும். சாலையில் நான் தடுமாறுவதை பார்த்தால் தயவு செய்து பொறுத்துக்கொள்ளுங்கள். என்னை போன்றோருக்கு ஊக்கமளிப்பதற்காக அஜித்குமாருக்கு நன்றி" என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார்.ரூ.22 லட்சத்துக்கு சொகுசு பைக் வாங்கிய மஞ்சுவாரியர்
அஜித்குமாரை பார்த்து நடிகை மஞ்சுவாரியருக்கும் பைக் ஆர்வம் தொற்றிக்கொண்டு உள்ளது. துணிவு படத்தில் இருவரும் இணைந்து நடித்து இருந்தனர். இதன் படப்பிடிப்பு வட மாநிலங்களில் நடந்தபோது ஓய்வு நேரத்தில் அஜித்குமார் பைக்கில் பல்வேறு இடங்களுக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்து இருந்தார். ஒரு கட்டத்தில் மஞ்சுவாரியரும் அவருடன் பைக் பயணத்தில் இணைந்தார்.
அஜித்குமாருடன் லடாக் பகுதியில் மஞ்சுவாரியர் பைக்கில் சென்ற புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியானது. படப்பிடிப்பை முடித்து விட்டு கேரளா திரும்பியதும் எர்ணாகுளம் காக்கநாடு ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு சென்று அதிகாரி முன்னிலையில் பைக் ஓட்டி காண்பித்து ஓட்டுனர் உரிமத்தை மஞ்சு வாரியர் வாங்கினார்.
இந்த நிலையில் தற்போது சுமார் ரூ.22 லட்சம் மதிப்புள்ள சொகுசு பைக்கை சொந்தமாக மஞ்சுவாரியர் வாங்கி இருக்கிறார். அந்த பைக்கை ஓட்டிச்செல்லும் வீடியோவை வலைத்தளத்தில் வெளியிட்டு, "துணிச்சலுக்கான ஒரு சிறிய படி எப்போதும் சிறந்தது. நல்ல ரைடர் ஆவதற்கு முன்பு நிறைய கற்க வேண்டும். சாலையில் நான் தடுமாறுவதை பார்த்தால் தயவு செய்து பொறுத்துக்கொள்ளுங்கள். என்னை போன்றோருக்கு ஊக்கமளிப்பதற்காக அஜித்குமாருக்கு நன்றி" என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார்.