< Back
சினிமா செய்திகள்
முத்த காட்சிக்கு மறுத்த மனிஷா
சினிமா செய்திகள்

முத்த காட்சிக்கு மறுத்த மனிஷா

தினத்தந்தி
|
19 Oct 2023 8:41 AM IST

நடிகை மனிஷா யாதவ் முத்த காட்சியில் நடிக்கவே மாட்டேன் என்று மறுத்துவிட்டார்.

இளையராஜா இசையில் உருவாகி வரும் பள்ளிப் பருவ காதல் படம் "நினைவெல்லாம் நீயடா" இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஆதிராஜன் டைரக்டு செய்கிறார். நாயகனாக பிரஜின், நாயகிகளாக மனிஷா யாதவ், சினாமிகா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்காக பிரஜினும், மனிஷா யாதவும் உதட்டோடு உதடு முத்தமிடுவதை புகைப்படம் எடுத்து போஸ்டராக வெளியிட டைரக்டர் ஆதிராஜன் விரும்பினார். ஆனால் பிரஜினை முத்தமிட்டு போஸ் கொடுக்க மனிஷா யாதவ் மறுத்துவிட்டார்.

பின்னர் 'வச்சேன் நான் முரட்டு ஆசை எனக்கேதான் மிரட்டும் மீசை' என்ற பாடல் காட்சியை படமாக்கியபோது மீண்டும் மனிஷாவை அணுகி உதட்டோடு உதடு முத்தமிடும் காட்சியில் நடிக்கும்படி வற்புறுத்தினார்.

அதற்கும் உடன்படவில்லை. முத்த காட்சியில் நடிக்கவே மாட்டேன் என்று மறுத்துவிட்டார். அதற்கு பதிலாக பிரஜின் கன்னத்தில் முத்தமிட்டு நடித்தார். இதனால் டைரக்டருக்கும், மனிஷாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்