< Back
சினிமா செய்திகள்
மணிகண்டன் நடித்துள்ள லவ்வர் படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகும் - படக்குழு அறிவிப்பு
சினிமா செய்திகள்

மணிகண்டன் நடித்துள்ள 'லவ்வர்' படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகும் - படக்குழு அறிவிப்பு

தினத்தந்தி
|
3 Feb 2024 7:49 AM GMT

குட் நைட் திரைப்படத்தில் மோகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் கவர்ந்தவர் நடிகர் மணிகண்டன்.

சென்னை,

குட் நைட் திரைப்படத்தில் மோகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் கவர்ந்த நடிகர் மணிகண்டன் தற்போது அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கியுள்ள 'லவ்வர்' (lover) திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் ஸ்ரீகெளரி பிரியா, கண்ணன் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றன. இதையடுத்து இந்த படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்து கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 'லவ்வர்' திரைப்படம் வருகிற 9-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்