< Back
சினிமா செய்திகள்
33 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரஜினிகாந்துடன் இணையும் மணிரத்னம்?
சினிமா செய்திகள்

33 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரஜினிகாந்துடன் இணையும் மணிரத்னம்?

தினத்தந்தி
|
5 Oct 2024 9:49 PM IST

ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் மணிரத்னம் கூட்டணியில் 33 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் 'தளபதி'.

சென்னை,

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது தனது 170-வது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். இப்படம் வருகிற 10-ந் தேதி வெளியாக உள்ளது. தற்போது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' படத்தில் நடித்து வருகிறார். கடந்து சில தினங்களாக அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக, வருகிற 15-ம் தேதி முதல் மீண்டும் ரஜினிகாந்த் 'கூலி' படத்தில் இணையவுள்ளதாக படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர் 2' படத்திலும் ரஜினிகாந்த் இணையுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில், 33 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குனர் மணிரத்னம் கூட்டணியில் மீண்டும் ரஜினிகாந்த் கைகோர்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகர் ரஜினிகாந்த்-இயக்குனர் மணிரத்னம் கூட்டணியில் 33 ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது 'தளபதி' படம். மகாபார கதையை மையமாகக் கொண்டு இந்த படத்தின் கதைக்களத்தை உருவாக்கியிருந்தார் இயக்குனர் மணிரத்னம். இப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்த படத்தின் அறிவிப்பை ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு டிசம்பர் 12-ம் தேதி படக்குழுவினர் வெளியிட உள்ளனர். தற்போது கமல்ஹாசனின் 'தக் லைப்' படத்தை இயக்கி வருகிறார் மணிரத்னம். இந்த படத்திற்காக மணிரத்னம் -கமல்ஹாசன் கூட்டணி 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளது. இதே போல மணிரத்னம் -ரஜினிகாந்த் கூட்டணி குறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

மேலும் செய்திகள்