கௌதம் மேனன் இயக்கத்தில் மம்முட்டி?
|நடிகர் மம்மூட்டி இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
2001-ம் ஆண்டு மின்னலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக களமிறங்கினார் கவுதம் மேனன். அதை தொடர்ந்து, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணமாயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, என்னை நோக்கி பாயும் தோட்டா, பாத்து தல என அடுத்தடுத்து இவரது படைப்பில் உருவான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் மாஸ் ஹிட் கொடுத்தது. இப்படி பல வெற்றி படங்களை இயக்கி வந்த கௌதம் மேனன் திரைப்படங்களில் குணசித்ர வேடங்களில் நடிக்கவும் தொடங்கினார்.
நடிகர் மம்முட்டி நடிப்பில் இறுதியாக வெளியான பிரம்மயுகம் விமர்சகர்களிடையே பாராட்டுக்களைப் பெற்றதுடன் வசூல் ரீதியான வெற்றியையும் அடைந்தது. அடுத்ததாக, மே 23-ம் தேதி டர்போ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. ஆக்சன் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
இந்த நிலையில், நடிகர் மம்முட்டி இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் கதை கேட்டதாகவும் அது அவருக்குப் பிடித்துப்போக தன் தயாரிப்பு நிறுவனமான மம்முட்டி கம்பெனி தயாரிப்பில் நடிக்க ஒப்புக்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.