< Back
சினிமா செய்திகள்
விஷ்ணு விஷால் ஜோடியாகும் பிரேமலு நடிகை
சினிமா செய்திகள்

விஷ்ணு விஷால் ஜோடியாகும் 'பிரேமலு' நடிகை

தினத்தந்தி
|
12 March 2024 8:58 PM IST

நடிகர் விஷ்ணு விஷால், நடிகை மமிதா பைஜு ஜோடியாக நடிக்கும் படத்தை இயக்குனர் ராம்குமார் இயக்க உள்ளார்.

மலையாள நடிகை மமிதா பைஜு தனது சமீபத்திய 'பிரேமலு' படத்தின் வெற்றி மூலம் புகழின் உச்சிக்கு சென்றுள்ளார். மலையாளத்தில் வெளியான 'பிரேமலு' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்து வருகிறது.

மேலும் ஜி.வி.பிரகாஷ் நடித்த 'ரெபெல்'படத்தின் மூலம் மமிதா பைஜு தமிழில் அறிமுகமாகி உள்ளார். இந்த படம் வருகிற 22 -ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில் மமிதா பைஜு தனது 2-வது தமிழ் படமான விவி21-ல் நாயகியாக நடிக்க உள்ளார். இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கும் அடுத்த புதிய படத்தின் தற்காலிக தலைப்பு விவி-21.

முண்டாசுப்பட்டி, ராட்சசன், படங்களுக்குப் பிறகு விஷ்ணு விஷால் - ராம்குமார் மீண்டும் இந்த படத்தில் இணைகின்றனர்.

விஷ்ணு விஷால் கடைசியாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'லால் சலாம்' படத்தில் நடித்திருந்தார்.

மேலும் செய்திகள்