< Back
சினிமா செய்திகள்
விஜய் தேவரகொண்டாவின் 12-வது படம் - நடிகை குறித்து வெளியான தகவல்
சினிமா செய்திகள்

விஜய் தேவரகொண்டாவின் 12-வது படம் - நடிகை குறித்து வெளியான தகவல்

தினத்தந்தி
|
11 May 2024 7:43 AM GMT

விஜய் தேவரகொண்டா தன்னுடைய 12-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சென்னை,

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் கீதா கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் கடைசியாக பேமிலி ஸ்டார் திரைப்படத்தில் நடித்திருந்தார். பரசுராம் பெட்லா இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

தற்போது விஜய் தேவரகொண்டா தன்னுடைய 12-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கவுதம் தினனுரி இயக்குகிறார். சித்தாரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இசை அமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். முன்னதாக இப்படத்தில் கதாநாயகியா நடிக்க ஸ்ரீலீலா ஒப்பந்தமானார். பின்னர் சில தனிப்பட்ட காரணங்களுக்காக படத்தில் இருந்து விலகினார்.

இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகை குறித்த தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரேமலு படத்தில் நடித்த மமிதா பைஜு மற்றும் பாக்யஸ்ரீ போர்ஸ் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்