மாமன்னன் திரைப்படம் எனக்குள் 30 ஆண்டுகளாக இருந்த ஆதங்கம் - ஏ.ஆர். ரகுமான் உருக்கம்
|இப்படம் வெளியாகி 50 நாட்கள் வெற்றிகரமாக திரையிடப்பட்டதை படக்குழு இன்று கொண்டாடினர்
சென்னை,
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த ஜூன் 29-ந்தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'மாமன்னன்'. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.
திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற 'மாமன்னன்' திரைப்படம் கடந்த ஜூலை 27-ந்தேதி ஓ.டி.டி.யில் வெளியானது. இப்படத்தின் வெற்றிக்காக ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு மினி கூப்பர் கார் பரிசாக வழங்கப்பட்டது.
இப்படம் வெளியாகி 50 நாட்கள் வெற்றிகரமாக திரையிடப்பட்டதை படக்குழு இன்று கொண்டாடினர் . இந்த விழாவில் மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலின், நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் வடிவேலு மற்றும் படத்தில் பணியாற்றிய அனைவரும் கலந்துகொண்டனர்.
இந்த விழா மேடையில் பேசிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பேசியபோது,
மாமன்னன் திரைப்படம் எனக்குள் 20-30 வருடமா இருந்த ஆதங்கம், ஏன் இப்படி நடக்கிறது என்று, என்னால் அதை இசையால் செய்ய முடியவில்லை. அதனால் அதை யார் செய்கிறார்களோ அவர்களோடு சேர்ந்து விட்டேன். வடிவேலுவின் ஒரு காட்சியை பார்த்த பின்பு தான் இந்த படத்தை மிகமிக சிறப்பாக கொண்டு போக வேண்டும் என்று நினைத்தேன். இவ்வாறு தெரிவித்தார்.
"30 வருஷமா எனக்குள்ள இருந்த ஆதங்கம்.." மேடையில் கண்கலங்கி நின்ற ஏ.ஆர்.ரஹ்மான். Surprise கொடுத்த மாமன்னன் Teamhttps://t.co/2Z8m6V8wVF pic.twitter.com/2kOdpCwAB2
— Thanthi TV (@ThanthiTV) August 17, 2023