< Back
சினிமா செய்திகள்
மாமன்னன் திரைப்படம் - இன்று முதல் முன்பதிவு தொடக்கம்
சினிமா செய்திகள்

'மாமன்னன்' திரைப்படம் - இன்று முதல் முன்பதிவு தொடக்கம்

தினத்தந்தி
|
25 Jun 2023 4:39 PM IST

'மாமன்னன்' திரைப்படம் வருகிற 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சென்னை,

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் தற்போது 'மாமன்னன்' படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படம் வருகிற 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படத்தை வெளியிடும் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் மாமன்னன் படத்துக்கு தணிக்கை குழுவால் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

இந்த நிலையில், 'மாமன்னன்' திரைப்படம் 29-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்திற்கான டிக்கெட் முன்பதிவு இன்று முதல் தொடங்க உள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


மேலும் செய்திகள்