< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
ஒடிடி-ல் வெளியாகிறது 'மாமன்னன்' திரைப்படம்!
|18 July 2023 5:38 PM IST
'மாமன்னன்' படம் ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் வெளியிடப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,
ஜூன் 29 அன்று திரைக்கு வந்த 'மாமன்னன்' திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கவனத்தை ஈர்த்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
வைகைப்புயல் வடிவேலுவை இதுவரை இல்லாத ஒரு தீவிர கதாபாத்திரத்தில் காட்டி அவருக்கு எதிராக பஹத் பாசிலை நடிக்க வைத்துள்ளதால் மாமன்னன் திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில் 'மாமன்னன்' படம் வரும் 27 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் வெளியிடப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.