< Back
சினிமா செய்திகள்
மலையாள டி.வி. நடிகரை மணந்த பிரபல நடிகை
சினிமா செய்திகள்

மலையாள டி.வி. நடிகரை மணந்த பிரபல நடிகை

தினத்தந்தி
|
26 Jan 2024 1:15 AM IST

தற்போது இவர் லப்பர் பந்து என்ற படத்தில் நடித்து வருகிறார்.

திருவனந்தபுரம்,

தமிழில் 'கோரிப்பாளையம், மைதானம், வைகை, சோக்காளி, அப்புச்சி கிராமம் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் சுவாசிகா. சாட்டை படத்தில் சமுத்திரக்கனியுடன் நடித்து இருந்தார்.

தற்போது இவர் லப்பர் பந்து படத்தில் நடித்து வருகிறார். கேரளாவை சேர்ந்த சுவாசிகா மலையாளத்திலும் அதிக படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சுவாசிகாவுக்கும், மலையாள டி.வி நடிகர் பிரேம் ஜேக்கப் இருவரும் காதலித்து வந்தனர். இருவரும் டி.வி. தொடர் ஒன்றில் இணைந்து நடித்தபோது பழகி பின்னர் காதலித்துள்ளனர். இவர்களது காதலை இருவீட்டு பெற்றோரும் ஏற்றுக் கொண்ட நிலையில் சுவாசிகா, பிரேம் ஜேக்கப் திருமணம் கேரளாவில் நடந்தது.

திருமணத்தில் சுரேஷ்கோபி உள்ளிட்ட நடிகர்கள் பலர் பங்கேற்று வாழ்த்தினர். திருமண புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்