< Back
சினிமா செய்திகள்
மலையாள பட வில்லன் நடிகர் தற்கொலை
சினிமா செய்திகள்

மலையாள பட வில்லன் நடிகர் தற்கொலை

தினத்தந்தி
|
28 Jun 2022 9:53 AM IST

மலையாள பட வில்லன் நடிகர் வீட்டுக்கு வெளியே மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.



திருவனந்தபுரம்,



நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியான திரைப்படம் ஆக்சன் ஹீரோ பிஜு. ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற இந்த படத்தில் வில்லனாக நடித்தவர் என்.டி. பிரசாத் (வயது 43). இதுதவிர இபா மற்றும் கர்மானி உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

இந்நிலையில், கொச்சி அருகே கலமசேரி பகுதியில் அவர், வீட்டுக்கு வெளியே மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அவரது குழந்தைகள் கவனித்து உள்ளனர். அருகே வசிப்பவர்களிடம் இதுபற்றி கூறியுள்ளனர். அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.

அவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். மனஉளைச்சல் மற்றும் குடும்ப காரணங்களால் தற்கொலை செய்துள்ளார் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக அவரது மனைவியும் உடனில்லை. மரணத்திற்கு சில நாட்கள் முன்பு அவர் அதிக மனஅழுத்தத்தில் இருந்துள்ளார் என போலீசார் கூறியுள்ளனர்.

கடந்த 2021ம் ஆண்டு பிரசாத் மீது, கஞ்சா உள்ளிட்ட பிற வகை போதை பொருட்களை வைத்ததற்காக கலால் துறை கைது நடவடிக்கை எடுத்தது. அவரிடம் இருந்து கொடிய ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்