< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
மலையாள பட இயக்குனர் வினு காலமானார்
|11 Jan 2024 10:21 AM IST
கடந்த 20 ஆண்டுகளாக இயக்குனர் வினு கோவை சிங்காநல்லூரில் வசித்து வந்தார்.
கோவை,
மலையாள திரைப்பட இயக்குனர் வினு கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர். 73 வயதான வினு உடல்நலக்குறைவு காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.
வினுவும் இயக்குனர் சுரேசும் இணைந்து ஆயுஷ்மான் பவா, மங்களம் வீட்டில் மனசேஸ்வரி குப்தா, குஷ்ருதி கட்டு உள்ளிட்ட பல மலையாள வெற்றிப்படங்களை இயக்கி உள்ளனர். கனிச்சுகுளங்கரையில் சி.பி.ஐ., இவர்கள் கூட்டணியில் உருவான கடைசி படமாகும்.
கடந்த 20 ஆண்டுகளாக வினு கோவை சிங்காநல்லூரில் வசித்து வந்தார். இயக்குனர் வினுவின் உடல் இன்று (வியாழக்கிழமை) கோவை நஞ்சுண்டாபுரத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.