< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
பட வாய்ப்பு தருவதாக கூறி பல முறை பாலியல் வன்கொடுமை; பிரபல மலையாள டைரக்டர் மீது நடிகை புகார்
|28 May 2024 9:52 PM IST
பட வாய்ப்பு தருவதாக கூறி பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரபல மலையாள டைரக்டர் மீது நடிகை புகார் அளித்துள்ளார்.
திருவனந்தபுரம்,
பிரபல மலையாள டைரக்டர் உமர் லுலு. இவர் மலையாளத்தில் ஹேப்பி வெட்டிங், ஜிங்ஸ், ஒரு ஆதர் லவ், நல்ல சமயம், டமாக்கா, பேட் பாய்ஸ் உள்பட பல்வேறு படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், பட வாய்ப்பு தருவதாக கூறி டைரக்டர் உமர் லுலு தன்னை பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக மலையாள நடிகை போலீசில் புகார் அளித்துள்ளார். உமர் லுலு டைரக்ட் செய்த படத்தில் நடித்துள்ள அந்த நடிகை கோச்சியை வசித்து வருகிறார்.
நெடும்பச்சேரி போலீஸ் நிலையத்தில் இளம் நடிகை அளித்த புகாரில், பட வாய்ப்பு தருவதாக கூறி நட்பாக பழகி உமர் லுலு கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை தன்னை பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார்.
இளம் நடிகை அளித்த பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக டைரக்டர் உமர் லுலு மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.