< Back
சினிமா செய்திகள்
Malayalam film art director Hari Varkala passes away
சினிமா செய்திகள்

மலையாள திரைப்பட கலை இயக்குனர் ஹரி வர்கலா காலமானார்

தினத்தந்தி
|
19 Aug 2024 12:47 PM IST

பல வெற்றிப்படங்களில் பணியாற்றிய ஹரி வர்கலா காலமானார்.

திருவனந்தபுரம்,

மலையாள சினிமாவில் பல வெற்றிப்படங்களை உருவாக்க கலை இயக்குனராக முக்கிய பங்காற்றியவர் ஹரி வர்கலா. இவர் கடந்த 1984-ம் ஆண்டு பிரபல இயக்குனர் ஜோஷி இயக்கத்தில் வெளியான 'சந்தர்பம்' திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார்.

ஜோஷியுடன் இவரது ஒத்துழைப்பு குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டணியில் பல வெற்றிப்படங்கள் உருவாகின. அதில், 'நாயர் சாப்', 'பத்ரம்', 'லேலம்', 'எண்.20 மெட்ராஸ் மெயில்' மற்றும் பல அடங்கும்.

90-கள் மலையாள சினிமாவிற்கு பொற்காலம் எனலாம். அப்போது பல வெற்றிப்படங்களுக்கு பின்னால் ஒரு முக்கிய நபராக இருந்தவர் ஹரி வர்கலா. 40க்கும் மேற்பட்ட மலையாள திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

இவ்வாறு பல வெற்றிப்படங்களில் பணியாற்றிய ஹரி வர்கலா காலமானார். 72 வயதான இவர் தனது இல்லத்தில் இன்று காலமானார். இதனையடுத்து, இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கடைசியாக 2015-ம் ஆண்டு ஜோஷி இயக்கத்தில் மோகன்லால் நடித்த 'லைலா ஓ லைலா' திரைப்படத்தில் ஹரி வர்கலா பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்