< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
சிகிச்சை பெற்றுவந்த நடிகர் மரணம்: திரையுலகினர் இரங்கல்
|14 Jun 2022 2:19 PM IST
உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மலையாள நடிகர் டி.பிலிப் காலமானார். அவருக்குத் திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல மலையாள நடிகர் டி.பிலிப். இவர் நாடகத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். கோட்டயம் குஞ்சச்சன், வேட்டன், அர்த்தம், பழசிராஜா, நேரம், கனவுகள், மதுவிடு, கந்தர்வ கோவில், பிரளயம், திலோத்தமா உள்பட 50-க்கும் மேற்பட்ட படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். சிறந்த நடிப்புக்காக கேரள அரசு விருதும் பெற்றுள்ளார். கோலங்கள் என்ற படத்தை தயாரித்தும் இருக்கிறார். டி.பிலிப்புக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். இவருக்கு வயது 79. டி.பிலிப் மறைவுக்கு மலையாள திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.