< Back
சினிமா செய்திகள்
மலையாள நடிகர் சுஜித் ராஜேந்திரன் சாலை விபத்தில் உயிரிழப்பு
சினிமா செய்திகள்

மலையாள நடிகர் சுஜித் ராஜேந்திரன் சாலை விபத்தில் உயிரிழப்பு

தினத்தந்தி
|
10 April 2024 1:27 PM IST

மலையாள நடிகர் சுஜித் ராஜேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

திருவனந்தபுரம்,

மலையாள நடிகர் சுஜித் ராஜேந்திரன் சாலை விபத்தில் சிக்கி கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எர்ணாகுளத்தில் ஆலுவா - பரவூர் சாலையில் இந்த விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், சுஜித் ராஜேந்திரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நடிகர் சுஜித் ராஜேந்திரன் துபாயில் பிறந்தவர். அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். திரைத்துறையில் இருந்த ஆர்வத்தால் கேரளாவிற்கு வந்து படத்தில் நடிக்க ஆரம்பித்தார். மேலும், அவர் பாடுவதிலும் நடனமாடுவதிலும் சிறந்தவர். இவர் 2018-ம் ஆண்டு வெளிவந்த 'கினாவல்லி' படத்தில் திரைத்துறையில் அறிமுகமானார். மேலும் அப்படத்தில் ஒரு பாடலும் பாடியுள்ளார்.

சன்னி லியோன் நடித்த மாரத்தான் மற்றும் ரங்கீலா படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், இவரது உயிரிழப்பு திரைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்