< Back
சினிமா செய்திகள்
உருவ கேலியால் நடிகை ஹனிரோஸ் வருத்தம்
சினிமா செய்திகள்

உருவ கேலியால் நடிகை ஹனிரோஸ் வருத்தம்

தினத்தந்தி
|
3 April 2023 1:43 PM IST

குண்டாக இருப்பதால் தன்னை வலைத்தளங்களில் உருவ கேலி செய்வதாக ஹனிரோஸ் வருத்தம் தெரிவித்து உள்ளார்.

தமிழில் முதல் கனவே, சிங்கம்புலி, காந்தர்வன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஹனிரோஸ். மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கிலும் நடித்துள்ளார். வீரசிம்மா ரெட்டி படத்தில் பாலகிருஷ்ணாவுடன் நடித்து இருந்தார்.

இந்த நிலையில் குண்டாக இருப்பதால் தன்னை வலைத்தளங்களில் உருவ கேலி செய்வதாக ஹனிரோஸ் வருத்தம் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து ஹனிரோஸ் அளித்துள்ள பேட்டியில், "சினிமாவில் கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி எனது ஆடைகள் இருக்கும். எனக்கு பிடித்த மாதிரி காட்சி அளிக்க நான் விரும்புவேன்,

எதுமாதிரியான உடைகள் அணிய வேண்டும், எப்படி காட்சி அளிக்க வேண்டும் என்பது நடிகர், நடிகைகளின் விருப்பம். கதாநாயகிகள் கொஞ்சம் எடை கூடி குண்டானால் உடனே வலைத்தளத்தில் கேலி செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். நானும் இதை எதிர்கொண்டு உள்ளேன். இஷ்டம்போல் சமூக வலைத்தளங்களில் எதிர்மறையாக மோசமாக பேசி மனதை நோகடிக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது'' என்றார்.

மேலும் செய்திகள்