விக்ரமின் 'வீர தீர சூரன்' படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்
|விக்ரமின் 'வீர தீர சூரன்' படத்தில் மலையாள நடிகரான சித்திக் நடிக்கவிருக்கிறார் என்று போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
நடிகர் விக்ரம் 'சித்தா' பட இயக்குநர் அருண்குமாருடன் 'வீர தீர சூரன்' படத்தில் நடித்து வருகிறார். படத்தின் டைட்டில் டீசர் சீயான் விக்ரமின் பிறந்தநாளன்று வெளியாகி மக்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றது. படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையில் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார்.
விக்ரமின் 62-வது படமான இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். அதைத்தொடர்ந்து படத்தின் புது அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. படத்தில் மலையாள நடிகரான சித்திக் நடிக்கவிருக்கிறார் என்று போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இவர் 350 மேற்பட்ட மலையாள படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார்.
டைட்டில் டீசரில் மளிகை கடையில் வேலை செய்யும் விக்ரம் திடீர் என்று துப்பாக்கி எடுத்து சுடும் காட்சிகள் மிரட்டலாக உள்ளது. மற்ற படங்களில் இல்லாத ஒரு விஷயம் இப்படத்தில் உள்ளது. படத்தலைப்பில் வீர தீர சூரன் பாகம் - 2 என்று வெளியிட்டுள்ளனர். முதலில் பாகம் இரண்டை வெளியிட்டபின் பாகம் ஒன்றை வெளியிடப்போகிறார்கள்.
இந்த வீடியோவில் விக்ரமின் தோற்றம் நம் கவனத்தை கவர்கிறது இதன் முந்தைய பாகம் அடுத்து வெளியாகும் என தெரிகிறது.