< Back
சினிமா செய்திகள்
சரித்திர படத்தில் நடிக்க விரும்பும் மாளவிகா
சினிமா செய்திகள்

சரித்திர படத்தில் நடிக்க விரும்பும் மாளவிகா

தினத்தந்தி
|
6 Oct 2023 7:40 AM IST

சரித்திர கதையம்சம் உள்ள படங்களில் ராணியாகவோ, இளவரசியாகவோ நடிக்க வேண்டும் என்பது எனது கனவு என்று நடிகை மாளவிகா தெரிவித்துள்ளார்.

தமிழில் ரஜினியுடன் 'பேட்ட', விஜய் ஜோடியாக 'மாஸ்டர்', தனுசுடன் 'மாறன்' படங்களில் நடித்துள்ள மாளவிகா மோகனன் தற்போது விக்ரமின் 'தங்கலான்' படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த நிலையில் ரசிகர்களுடன் சமூக வலைத்தளத்தில் மாளவிகா மோகனன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்து மாளவிகா மோகனன் கூறும்போது, ''இதுவரை நான் நடித்த படங்களில் சவாலான கதாபாத்திரம் 'தங்கலான்' படத்தில் அமைந்தது.

அதில் எனது நடிப்பு ரசிகர்களுக்கு பிடிக்கும். 'தங்கலான்' படம் எப்போது ரிலீசாகும் என்பதை இயக்குனரிடம்தான் கேட்க வேண்டும். எனக்கு பிடித்த நடிகர் பகத் பாசில். சரித்திர கதையம்சம் உள்ள படங்களில் ராணியாகவோ, இளவரசியாகவோ நடிக்க வேண்டும் என்பது எனது கனவு. மாஸ்டரை தவிர்த்து விஜய் நடித்த படங்களில் எனக்கு பிடித்தது 'தெறி' படம்' என்றார்.

மேலும் செய்திகள்