பிறந்தநாள் பரிசு.. தங்கலான் படக்குழு வெளியிட்ட போஸ்டர்; இதுவரை கண்டிராத அவதாரத்தில் மாளவிகா மோகனன்!
|தங்கலான் படத்தில் மாளவிகா மோகனன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சென்னை,
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் 'தங்கலான்'. இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடிக்கின்றனர். 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில், மாளவிகா மோகனனின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து தங்கலான் படத்தில் அவரின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாளவிகா மோகனன் படத்தில் பழங்குடி பெண்ணாக நடிக்கிறார் மற்றும் போஸ்டரில் இதுவரை பார்த்திராத தோற்றத்தில் உள்ளார்.