< Back
சினிமா செய்திகள்
ரசிகர்களை உறைய வைக்கும் மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் கிளிக்
சினிமா செய்திகள்

ரசிகர்களை உறைய வைக்கும் மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் கிளிக்

தினத்தந்தி
|
18 Jan 2024 4:02 PM IST

மாளவிகா மோகனன் சியான் விக்ரம் நடித்து இருக்கும் தங்கலான் படத்தில் நடித்து முடித்து உள்ளார்.

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாள சினிமாவில் கடந்த 2013-ம் ஆண்டில் வெளியான "பட்டம் போலெ" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார். இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் படமான "பேட்ட" படத்தில் மாளவிகா மோகனன் நடித்திருந்தார்.

அதன் பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தில் மாளவிகா மோகனன் நடித்து இருந்தார். இந்த படம் மிக பெரிய அளவில் வசூல் படம் செய்து இருந்தது. மாஸ்டர் படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று சாதனை படைத்த நிலையில் இவருக்கு பிரபலமும் கூடியது. பின் இவர் நடிகர் தனுஷ் நடித்த மாறன் படத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் பா ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து இருக்கும் தங்கலான் படத்தில் நடித்து முடித்து உள்ளார்.

மேலும் சில படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில், மாளவிகா தன் புதிய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இவை இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தொடர்ந்து, இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களைப் பகிர்ந்து வருவதால் மாளவிகாவின் ரசிகர்கள் 'தினசரி விட்டமின்கள்' என கிண்டலாக கருத்தும் தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகள்